மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை சொன்ன செல்வராகவன்.! நீங்க சொல்லுறது சரிதான்…

selvaragavan
selvaragavan

சினிமா உலகில் வெற்றி படங்களை இயக்கி கொடுத்த செல்வராகவன் தற்போது நடிகராக களம் இறங்கி அசத்தி வருகிறார். அந்த வகையில் சாணி காயிதம் தற்பொழுது விஜயின் 65வது திரைப்படம் போன்றவற்றில் அடுத்து அடுத்து நடிக்க உள்ளதால் தற்போது இயக்குனர் என்ற பெயரையும் தாண்டி நடிகர் செல்வராகவன் என பலரும் கூப்பிட ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் காதல் சம்பந்தப்பட்ட படங்களை மிக சிறப்பாக இயக்கி வெற்றி கண்ட அவர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் செல்வராகவன் தான். இதுவரையிலும் காதல் சம்பந்தப்பட்ட படங்கள் பல வந்திருக்கின்றன ஆனால் இவரது இயக்கத்தில் வரும் திரைப்படம் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் இதுவரை யாரும் எடுத்துக்காத கதை அம்சமாகும் இருப்பதால் இவரது திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன.

அப்படி பல திரைப்படங்கள் வந்திருந்த நிலையில் சமீபகாலமாக அதிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார் அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், என் ஜி கே, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன.

இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் 2,  புதுக்கோட்டை 2,நானே ஒருவன் போன்ற படங்கள் அடுத்தடுத்து தனுஷை வைத்து எடுக்க உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது இயக்கி உள்ளது.

அதற்கு காரணம் இதன் முதல் பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் தற்பொழுது இந்த படம் எத்தனை வருஷம் கழித்து எடுத்தாலும் அதை பார்த்து விட வேண்டும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் இந்த நிலையில் செல்வராகவன் வாழ்க்கையில் எல்லாமே எளிதுதான் நாம் கண், காது, மூக்கு வைத்து கடினமாக்கி கொள்கிறோம் என கூறி தனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.