என்னது சமந்தா நடித்த சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா.? இதோ புதிய ரிலீஸ் தேதி…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சமந்தா அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப் போய் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கடும் சோதனை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாக்கி உள்ள சகுந்தலம் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

நீண்ட நாட்களாக காத்திருந்த சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப்போனது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது ஏனென்றால் நடிகை சமந்தா அவர்கள் சமீப காலங்களாக எந்த ஒரு திரைப்படத்திலும் சரிவர நடிக்காமல்  இருந்திருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணம் அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது தான் அது மட்டுமல்லாமல் இவர் அந்த நோயால் பாதிக்கப்பட்ட போது மருதமலையில் இருந்தபடியே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சமதவிற்கு என்ன ஆனது என்று தெரியாமல் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து தற்போது சமந்தா அந்த கொடிய நோயில் இருந்து மீண்டு உள்ளார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சமந்தாவின் சகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர் இதனால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது சகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது ஏற்கனவே பட குழு சகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர் இந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கு சகுந்தலம் திரைப்படத்தை தள்ளி வைத்துள்ளனர்.

இதோ சகுந்தலம் படத்தின் அறிவிப்பு.

Leave a Comment