மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாக்கி வரும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார், மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் பாதி படப்பிடிப்பை முடித்துள்ளார். ஆனால் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால், மற்ற நட்சத்திரங்களின் பகுதிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர்.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ரிலீஸ் ஜூலைக்கு தள்ளப்படும் என்று சமீபத்திய தகவல் தெரிவித்து இருந்ததாக சில தகவல் வெளியானது. ‘மாவீரன்’ படத்தை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் மாதம் வெளியிடத் படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ படமும் அதே வார இறுதியை இலக்காகக் கொண்டு இருக்கிறது, இதனால் மாவீரன்’ தயாரிப்பாளர்கள் தங்கள் திட்டத்தை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

‘மாமன்னன்’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய திரைப்படங்களின் திரையரங்கு விநியோக உரிமையை ஒரே தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியதால், ‘மாவீரன்’ படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு ‘மாவீரன்’ தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

மாவீரன்’ ஒரு ஆக்‌ஷன் என்டர்டெய்னர் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சில உயர்நிலை ஸ்டண்ட்களை செய்து இருக்கிறார் என்று கூறபடுகிறது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின் மற்றும் சரிகா முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. அவர் தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், எனவே உதயநிதியின் சினிமா வாழ்க்கையில் ‘மாமன்னன்’ பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறபடுகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, ஃபஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Leave a Comment