KGF படத்தில் “யாஷ்” நடிக்க ஒப்புக் கொண்டதற்கு என்ன காரணம் தெரியுமா.? பேட்டியில் அவரே சொன்ன சுவாரசிய தகவல்..

பிரமாண்ட பட்ஜெட் படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தென்னிந்திய சினிமா உலகில்  தான் அண்மைகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெலுங்கு சினிமா இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2  மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட RRR படமும் வெளியாகி மிகப்பெரிய வசூலை அள்ளியதோடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் இந்த படங்கள் பேசப்பட்டன இது இப்படி இருக்க கன்னட சினிமாவில் உருவான கேஜிஎப் 2  திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை வித்தியாசமான கதைக்களத்தில் பிரசாந்த் நீல் எடுத்திருந்தார் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் யாஷும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த படமாக இருந்ததால் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் இந்த படம் பிரபலமடைந்து வசூல் வேட்டை நடத்தியது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் KGF படம் குறித்து  நடிகர் யாஷ் கூறியது. கே ஜி எஃப் திரைப்படத்தை நான் தேர்ந்தெடுத்து நடிக்க காரணம் தங்கம் பற்றிய பல தகவல்கள் மக்களுக்கு தெரியாது. குறிப்பாக இந்தியாவில் கேஜிஎப் தங்க சுரங்கம் பற்றி அதிகம் தெரியாது.

KGF – ல் நடந்த உண்மை நிகழ்வுகளை நாங்கள் சொல்லவில்லை என்றாலும் உலகத்தில் இருக்கும் தங்க சுரங்கங்களில் இதுபோன்ற நடந்துள்ளது அதைத்தான் நாங்கள் கேஜிஎப் படத்தில் காட்டி உள்ளோம். படத்தின் கதை வித்தியாசமாக தங்க சுரங்கத்தை பற்றி ஓரளவு சொல்லும்  ஒரே படமாக இது இருந்ததால்  இதில் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன் என கூறினார் நடிகர் யாஷ்.

 

Leave a Comment