நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் ஆகிய கதாபாத்திரங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார் என தான் ஹீரோவாக இவர் நடித்திருந்தாலும் மாஸ்டர் திரைப்படம் தான் இவருக்கு அடுத்த லெவலுக்கு செல்ல மிகவும் உறுதுணையாக இருந்தது.
விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையாக இவரும் சில பஞ்ச் டயலாக்குகளை பேசி ரசிகர்களை அதிர வைப்பார். இப்படி எல்லாமே விஜய் சேதுபதிக்கு பாசிடிவ்வாக அமைந்தால் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் தலையில் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்ப்பை பெற்றது இதற்கு முழு காரணம் விஜய் தான் என விஜய் சேதுபதி கூறி உள்ளார். ஒரு டாப் ஹீரோ படத்தில் என்னதான் பிரபல நடிகர்கள் வில்லனாக நடித்தாலும் ஒரு முக்கிய ஹீரோ அவரை தாழ்த்தி பேச ஒத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய்யோ இதிலிருந்து மாறுபட்டு இருந்தார் அவரது படமாக இருப்பினும் எனக்கு அதிகப்படியான முக்கியத்துவம் உள்ள சில சீன்கள் எனக்கு இடம் பெற்று இருந்தது.
அதே போல அவரை இழிவு படுத்தி பேசுவது எனக்கு இருந்தது என எல்லாமே அவருக்கு விட எனக்கு அதிகமாக இருந்தது ஆனால் அதையெல்லாம் விஜய் கண்டு கொள்ளவே இல்லை அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அப்படி என பெருந்தன்மையாக விட்டுள்ளார் ஆனால் இப்போது இருக்கும் சினிமா உலகில் டாப் ஹீரோ படத்தில் ஒரு வில்லன் நடிக்கும் பொழுது ஹீரோ வில்லனை தாழ்வு பற்றி பேசலாம் ஆனால் வில்லன் ஹீரோவை அப்படி பேச ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் விஜய் அப்படி கிடையாது.
சொல்லப்போனால் ஒரு டயலாக்கில் விஜய் சேதுபதி யோவ் வாத்தி நீ சொல்றத நிறைய பேர் கேட்டுட்டு இருக்காங்க ஆனா இப்ப நான் சொல்றதை நீ கேளு போன்ற பஞ்ச் டயலாக் எனக்கும் ஆசை ஆகவும் அவர்கள் மாஸ் குறைந்து போயிருக்கும் ஆனால் அதையும் ஏற்றுக்கொண்டு நடிக்க வைத்தார்.
உண்மையில் சொல்ல போனால் பவானி கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தால் எத்தனை மாற்றங்களை வேண்டுமானாலும் செய்ய வைத்து இருக்கலாம் ஆனால் அதை அவர் எதுவும் செய்யாமல் அவருக்கான கதாபாத்திரம் என விட்டு அதன் காரணமாகவே தற்போது எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விஜய் சேதுபதி கூறினார்.