“ஜீன்ஸ்” திரைப்படத்தில் அஜித் நடிக்காமல் போனதற்குக் காரணமே.. அவரிடம் இருக்கும் இந்த ஒரு பழக்கம் தானாம்.! இப்போது வரை பின்பற்றி வருகிறார்.

தமிழ் சினிமா உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பான படங்களை எடுத்து கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர் இயக்குனர் ஷங்கர். அந்த காரணத்தினாலேயே ரசிகர்கள் அவரை செல்லமாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என அழைப்பது வழக்கம். ஷங்கர் இதுவரை ரஜினி, விஜய், விக்ரம், பிரசாந்த், கமல்,அர்ஜுன் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

அதுபோல 1988ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம்  ஜீன்ஸ் அப்பொழுது வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் பிரசாந்த் நடித்தார். உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஹீரோயின்னாக நடித்து அசத்தியிருப்பார் இந்த படம் வித்தியாசமாகவும் அதேசமயம் HD தரத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணத்தினால் இந்த படத்தில் நடித்த பிரசாந்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உண்மையில் இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம் சில காரணங்களால் அவர் விலகினார் என்று தான் நமக்கு தெரியும்.

ஆனால் உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் அதற்கான பதிலும் கிடைத்து உள்ளது. ஜீன்ஸ் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய முதல் மூன்று நாட்கள் வரை அஜீத் தான் நடித்தார் அதன்பின் அஜித் இந்த படத்தில் இருந்து விலகினார் காரணம் இந்த படத்தின் விளம்பரங்களை பிரம்மாண்டமாக செய்யும் ஷங்கர். ஜீன்ஸ் படத்திற்கான பிரமோஷன்களில் அஜித் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரது கொள்கை புரோமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார்.

அது போல இதிலும் கலந்து கொள்ளாமல் இந்த படத்தை விட்டு வெளியேறிதாக கூறப்படுகிறது அதைத் தொடர்ந்து ஷங்கர் எந்த ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க அஜித்தை முயற்சி செய்யவே இல்லை பல வருடங்கள் கழித்து ஒரு வழியாக ஃபேஸ்புக்கில் இணைந்த ஷங்கர் அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் குறித்து ஒரு பதிவை போட்டுள்ளார் என்பது தான் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment