80 90 காலகட்டங்களில் நடந்த உண்மை சம்பவம் மற்றும் பழைய கதைகளை மையமாக வைத்து தற்போது எடுத்து படத்தை வெளியிடுகின்றனர் அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் 70 காலகட்டங்களில் நடந்த குத்துச்சண்டையை வைத்து மையமாக எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படம் சில தினங்களுக்கு முன்பு அமேசான் OTT தளத்தில் வெளியாகி தற்போது வரை வெற்றியை கண்டு வருகிறது இந்த திரைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என ஒவ்வொருவரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் சமூக வலைதளப் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் நடித்த கதாபாத்திரங்கள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மிரட்டும் வகையில் இருந்துவந்துள்ளது.
இந்த படத்தில் நடித்தவர்கள் நிச்சயம் தமிழ் சினிமா அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுக்கும் அந்த வகையில் ஆர்யாவைத் தொடர்ந்து வேம்புலி கதாபாத்திரத்தில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய ஜான் கொக்கேன் நடிப்பு உச்சத்தில் இருந்தது இவருக்கு வெகுவிரைவிலேயே அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்கும் என பலரும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வேம்புலி கேரக்டரில் ஒன்றிப்போய் நடித்தற்கு முக்கிய காரணம் ஒரு பெண்தான் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜான் கோக்கேன்.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் உதவி இயக்குனராக ஜன்னி என்பவர்தான் தன்னை வேம்புலி கேரக்டராக மாற்ற பெரிதும் உதவினார்.
அவர்தான் தனக்கு வசனங்கள் சொல்லிக் கொடுத்ததார் மேலும் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது எனக்குள் இருந்த வேம்புலி கேரக்டரை கொண்டு வந்தது அவர் தான் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
மேலும் அந்த உதவி இயக்குனர் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி உள்ளார். இதோ அவர் போட்ட பதிவு மற்றும் புகைப்படம்.
Meet Assistant Director 'Jenny', the lady who helped with all my dialogues and who helped me get into the character and mood of 'Vembuli' every single day of the shoot.
Watch #SarpattaOnPrime Streaming now only on @PrimeVideoIN #SarpattaParambarai #SarpattaParambaraiOnPrime pic.twitter.com/6D8u7qjr6c
— Highonkokken (@johnkokken1) July 24, 2021