பிக்பாஸ் வீட்டில் விளையாட வந்த நோக்கமே வேற.. கவினை காதலித்தது மிகப்பெரிய தவறு.! அவரே சொன்ன செய்தி.

விஜய் டிவியில் வெளியாகி தற்போது சீசன் சீசனாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இதில் கலந்து கொள்பவர்களும் தற்போது வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவின் லாஸ்லியா இருவரும் வெள்ளித்திரையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர். தொடர்ந்து இவர்களது பற்றிய செய்திகள் அவ்வப்போது இணையதள பக்கத்தில் கசிவது வழக்கமாக இருக்கின்றன.

கவின் தற்போது “லிப்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுபோல லாஸ்லியா பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதைத்தொடர்ந்து தர்ஷன் உடன் இணைந்து “கூகுள் குட்டப்பா” என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படி இருவரும் ஒரு ஆள் மாற்றி மாற்றி படங்களில் நடித்து வருகின்றனர் இப்படி ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் லாஸ்லியா சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ் வீட்டில் கவினின் காதல்  குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியது நான் பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து மிகப்பெரிய தவறு என் குடும்பத்திற்காகவும் என்னுடைய தங்கைகாகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அவர்களுக்காக தான் விளையாட வந்தேன் அங்கு வந்து காதலித்தது மிகப்பெரிய தவறு அதனால்தான் இந்த காதலை நான் முறித்துக்கொண்டேன் என கூறினார்.  செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் கவின் ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.

Leave a Comment