ஆலியா மானசா நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.! அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு எனக் கூறும் ரசிகர்கள்..

0

விஜய் டிவியின் மூலம் அறிமுகமான சின்னத்திரை நடிகை ஆலியா மானசா திடீரென விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவி ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் பெருதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதுm மேலும் அந்த சீரியல் குறித்த ப்ரோ மொபைல் சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆலியா மானசா.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இவருடைய முதல் சீரியலை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பினை பெற்று தந்ததுm இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பிறகு தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார் இரண்டாவது முறையாக இவர் கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலை விட்டு விலகினார். இவ்வாறு இதன் காரணத்தினால் குழந்தை பிறந்ததற்கு பிறகு குண்டானார் எனவே தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக உடல்பயிற்சி செய்து வருகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது.

இந்நிலையில் இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் சரிகம நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இவர் நடிக்க இருக்கும் சீரியலுக்கு இனியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவே தற்பொழுது சன் டிவி அந்த ப்ரோமோவை வெளியிட்டு ஆலியா மானசா சன் டிவியில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளது.

இவ்வாறு நடிகை ஆலியா மானசா மீண்டும் விஜய் டிவியில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சன் டிவியில் நடிக்க இருக்கிறார் எனவே இது விஜய் டிவி ரசிகர்களுக்கு பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தி உள்ளது.