அஜித்தை அசிங்க அசிங்கமாக பேசி அவமானப்படுத்திய தயாரிப்பாளர்.! அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கை கொடுத்து காப்பாற்றிய தல.!! இதுதான் சார் பெருந்தன்மை…

0
ajith
ajith

தென்னிந்திய சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது முன்னணி இடத்தில் இருக்கிறார். இவருக்கேன கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டணத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக ஏ கே 62 திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் அஜித்தை மேடையில் வைத்து அசிங்கப்படுத்தி உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யை வைத்து கில்லி, குஷி, சிவகாசி, போன்ற படங்களை தயாரித்த ஏ எம் ரத்தினம் கில்லி திரைப்படத்தையும் தயாரித்து இருந்தார். கில்லி திரைப்படம் வெற்றியடைந்த போது வெற்றி விழாவில் கலந்து கொண்ட ஏ எம் ரத்தினம் அவமானபடுத்தியுள்ளார் அதாவது அஜித் என்பவர் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று மேடையிலேயே பேசி அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல அஜித்தை அசிங்கப்படுத்திய ஏ எம் ரத்தினம் அடுத்த ஐந்து வருடம் காணாமல் போயிருந்தார் அது மட்டுமல்லாமல் நஷ்டத்தினால் படங்களை எடுக்கவும் முடியாமல் நடுத்தெருவிற்கு வந்து நின்றார். இதை அறிந்த அஜித் பெருந்தன்மையுடன் நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறி ஆரம்பம் படத்தை கொடுத்தார்.

அதன் பிறகு என்னை அறிந்தால், வேதாளம் போன்ற படங்களை ஏ எம் ரத்தினத்திற்கு கொடுத்து உதவியுள்ளார் இதனால் அவருடைய கடனை அடைத்து மீண்டும் தயாரிப்பாளராக திரும்பினார். இதை மேடையில் பேசிய ஏ எம் ரத்தினம் அஜித்தை பாராட்டியும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.