அஜித்துக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என கூறிய தயாரிப்பாளர்.! தல 61 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.

0

சினிமாவில் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களையும் தாண்டி இல்லத்தரசி களையும் பெண்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார் அஜித். இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ள தற்போது ஆக்ஷன் மற்றும் குடும்பகதைகள் கலந்த படங்களையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அஜித்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் அதிகமாக ஆக்ஷன் சீன் இருந்தாலும் சென்டிமெண்ட் செயல்கள் இருக்கும் என ஒரு பக்கத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திலிருந்து அப்டேட்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதனால் ரசிகர்கள் தற்போது செம இன்ப அதிர்ச்சியில் இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அப்போது அவர் பேசியது ஒரு நடிகருக்கு இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருப்பதை நான் இதுவரை பார்த்ததே இல்லை என அதைப் பற்றியே பெருமையாக பேசினார்.

மேலும் வலிமை திரைப்படம் மிக சூப்பராக வந்திருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் அஜித் தற்போது தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்காமல் ஊர் சுற்றி பொழுதை கழித்து வரும் நிலையில் அடுத்த படம் யாருடன் என்பது மிகப்பெரிய கேள்வி குறியாக இருந்து வந்த நிலையில் பொனிகபூர் அவர்கள் அஜித்தின் 61 திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை மீண்டும் ஹச்.வினோத் இயக்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக இருக்கின்றனர் மேலும் வலிமை படத்தைவிட 61 படத்தில் டபுள் மடங்கு ஆக்ஷன் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது .இந்த செய்தி தற்பொழுது இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

poni kapoor and ajith
poni kapoor and ajith