வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு எடுத்த ரிஸ்கை பாராட்டிய தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த நடிகர் சிம்பு ஒரு கட்டத்திற்கு பிறகு ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு திரைப்படங்கள் நடிப்பதில் இருந்து விலகினார் மேலும் இவர் நடிப்பில் சில ஆண்டுகள் எந்த படம் வெளி வராத காரணம் பின்னால் ரசிகர்கள் பெரிதும் மன வருத்தத்தில் இருந்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமான இவர் மிகவும் குண்டாக மாறியது ரசிகர்கள் மத்திய பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பலரும் சிம்புவை விமர்சித்து வந்தார்கள் எனவே தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்து தற்பொழுது செம ஸ்டைலாக மாறி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படத்தின் மூலம் வெற்றி பாதிக்கு சென்றார்.இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றது அந்த வகையில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது எனவே இதன் காரணமாக சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சில காலங்கள் பிக்பாஸ் தொகுப்பாளர், விளம்பர படங்கள், திரைப்படங்கள் என சிம்பு செம ஸ்டைலாக தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது விண்ணைத்தாண்டி வருவாயா ஸ்டைலில் சிம்புவை மாற்றி தற்பொழுது கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தினை உருவாக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது மேலும் அதில் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார் இந்நிலையில் படத்தின் நடிப்பதற்காக 20 வயது இளைஞனாக நடிக்க சிம்பு தன்னுடைய உடல் எடையை 23 கிலோ வரை குறைத்துள்ளாராம் இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார் இவ்வாறு சிம்பு வெந்து தணிந்தது காடு படத்திற்காக 23 கிலோ குறைத்தது பாராட்டு பட்டு வருகிறது.

Leave a Comment