சுறா படத்தை பற்றி ஒரே வார்த்தையில் ரத்தின சுருக்கமாக சொன்ன படத்தின் தயாரிப்பாளர்.! அப்செட்டில் தளபதி ரசிகர்கள்.

sura
sura

தமிழ் திரை உலகிற்கு அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர்களில் ஒருவராக பார்க்கபடுவர் தளபதி விஜய்.

கதையை நன்கு ஆராய்ந்த பின் தான் படத்தை தேர்வு செய்து நடிக்கிறார் இதனால் ஒவ்வொரு திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவது வழக்கம்.

ஆனால் ஒரு சில திரைப்படங்கள் முக்கியமான நேரங்களில் மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை பெறுவதோடு படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் அடுத்த படத்தை இயக்க முடியாமல் தெருவிற்கு வருவதும் உண்டு.

அப்படி விஜய்யின் 50-வது திரைப்படமான சுறா திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் படம் திரையரங்கில் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனதோடு மட்டுமில்லாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்ததால் விஜய்யின் கேரியரில் மிகவும் மோசமான படமாக அமைந்தது.

இந்த நிலையில் சுறா படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுறா படம் குறித்து ஒரே வார்த்தையில் கூறி விட்டார்.அவர் கூறியது அது ஒரு கண்றாவி சுறா என ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தார்.

சுறா படத்தின் தோல்வி  மிகப்பெரிய அளவில் பாதித்து உள்ளது என தெரிய வருகிறது.