லாபம் இல்லாமல் தலையில் துண்டு போடும் பத்து தல படத்தின் தயாரிப்பாளர்.? அட இது என்ன புது கொடுமையா இருக்கு.!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் தான் சிம்பு இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளம் வருகிறார்.

மேலும் சிம்புவின் திரைப்பயணத்தில் அவருக்கு நிறைய திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் கடந்த 30ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியாகி தற்பொழுது வரை நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் பத்து தல.

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் போன்ற ஒரு சில முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கியிருந்தார் மேலும் ப்ரியா பவானி சங்கர், சந்தோஷ் போன்ற ஒரு சில முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது இந்த திரைப்படம் வெளிவந்து ஏழு நாட்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை வந்த வசூல் மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வில்லையாம் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.மேலும் தயாரிப்பாளருக்கு பத்து தல படம் வெளியாவதற்கு முன் செய்யப்பட்ட ப்ரீ பிஸ்னஸில் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துவிட்டது எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

str
str

ஆனால் இந்த இரண்டு தகவல்களில் எது உண்மை என்று தெரியவில்லை மேலும் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் கண்டிப்பாக என்ன நடந்தாலும் சிம்புவின் அடுத்த திரைப்படத்தை நாங்கள் திரையில் காண மிக ஆவலோடு இருக்கிறோம் சிம்பு அடுத்ததாக நடிக்கப் போகும் திரைப்படத்தைப் பற்றி அப்டேட் கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment