“வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றியை முன்னிட்டு கௌதம் மேனனுக்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.! என்ன தெரியுமா.?

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில்  உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் சிம்பு, ராதிகா சரத்குமார்,, kayadu lohar, neeraj madhav, siddhi idnani மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெந்து தணிந்தது காடு  படம் ஒரு வழியாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

படம் ஆரம்பத்திலேயே நல்ல விமர்சனத்தை பெற்றது அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நன்றாகவே அள்ளியது வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாட்கள் போக போக இந்த படத்தின் வசூலும் குறைந்தது இருப்பினும் படக்குழு எதிர்பார்த்ததை விட இந்த நன்றாக வசூல் அள்ளிதான் இருக்கிறது.

30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியதாம். இதனை அடுத்து படக்குழு அண்மையில் சக்சஸ் பார்ட்டி வைத்து நடத்தியது இதில் சிம்பு, கௌதம் மேனன், தயாரிப்பாளர் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகும் என படத்தின் தயாரிப்பாளர், சிம்பு என அனைவரும் வெளிப்படையாக பேசினார்.

வெந்து தணிந்தது காடு  திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் அந்த படத்தின் இயக்குனர் கௌதமேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பைக்கை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் ஆம் கௌதமனனுக்கு தயாரிப்பாளர் இரண்டு லட்சம் மதிப்புள்ள ஒரு புல்லட் பைக்கையை பரிசாக கொடுத்துள்ளார்.

புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து  கமல் அந்த படத்தின் இயக்குனர் லோகேஷுக்கு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை கொடுத்தார் அதேபோல தற்பொழுது ஐசரி கணேஷ் கௌதம் மேனன்னுக்கு ஒரு புல்லட்டை வாங்கி கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vendhu-thanithathu-kaadu
vendhu-thanithathu-kaadu

Leave a Comment