தயாரிப்பாளர், மேனேஜர் இவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும்.! நடிகையின் அம்மாவிடமே கேட்ட பிரபலம்…

சினிமாவை பொறுத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை அதிகமாகவே அடிபடுகிறது. அப்படி பிரபல நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ரிங்கள என்று வெளிப்படையாகவே பிரபல நடிகையின் அம்மாவிடமே கேட்ட ஒருவரால் அந்த நடிகையின் சினிமா வாழ்க்கையே தொலைந்தது அதை பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதாவது ஜெயம் ரவி மற்றும் சதா நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயம். இந்த திரைப்படம் நடிகர் ஜெயம் ரவியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க மிகப்பெரிய உதவியாக இருந்தது என்றே சொல்லலாம்.

இந்த திரைப்படத்தில் சதாவின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கல்யாணி. இவர் ஜெயம் படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான இவர் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம், உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காததால் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை கல்யாணி அவர்கள் 7 வயதிலிருந்து 26 வயது வரை குழந்தை நட்சத்திரமாக தொகுப்பாளராகவும் இருந்து வந்தார் அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அப்போது என் அம்மாவிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா என்று கேட்டார்கள் இது புரியாத என்னுடைய அம்மா படப்பிடிப்பு தானே சொன்ன தேதியில் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார் ஆனால் அந்த நபர் தெளிவாக கூறியிருக்கிறார் அதாவது மேனேஜர் கூட தயாரிப்பாளர் கூட என பலருடன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதைக் கேட்ட என்னுடைய பெற்றோர் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இனிமேல் கல்யாணி நடிக்கவே வேண்டாம் என்று முடிவு எடுத்து திருமணம் செய்து வைத்தார்கள் என்று அவரே ஒரு பெட்டியில் கூறி இருக்கிறார்.

Leave a Comment