குக் வித் கோமாளி டைட்டிலை தட்டிச்சென்ற கனிக்கு பரிசுத் தொகை மட்டும் இத்தனை லட்சமா.! மெர்சல் காட்டுகிறாரே.

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி இல் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக பல விதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து பரபரப்பாக பார்க்கப்பட்டு வந்தது அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியும் ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி கிராண்ட் பினாலே நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுடன்  பட்டையை கிளப்பிய இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி டைட்டில் பட்டம் பெற்றார் கனி.

மேலும் இரண்டாவது இடத்தை ஷகிலாவும் மூன்றாவது இடத்தை அஸ்வினும் தட்டி சென்றார்கள். முதலிடத்தை தட்டி சென்ற கனிக்கு  பரிசு பொருட்களும் பரிசுத் தொகையும் குவிந்தது. அதுமட்டுமில்லாமல் முதல் இடத்தைப் பிடித்த கனிக்கு 5 லட்சம் ரொக்கப் பரிசும்  19 ஆயிரம் மதிப்புள்ள கிச்சன் பொருள்கலும் வழங்கப்பட்டது இதனை அடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளி காட்டினார்.

kani
kani

அதேபோல் சக போட்டியாளர்கள் கனிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் மேலும் குக் வித் கோமாளி இறுதிப்போட்டியில் சவுத் இந்தியன் உணவு வகையை தான் செய்ய வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்ததாகவும் அந்த வகையில் சிறப்பான சமையல் மற்றும் சிறப்பான பிரசன்டேஷன் ஆகிய இரண்டும் தனக்கு டைட்டிலை பெற்று கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கனி.

கனி கொடுத்த பிரசெண்டேஷன் குக் வித் கோமாளி வனிதா கொடுத்த பிரசெண்டேஷன் விட ஒருபடி மேலாக இருந்ததாக நடுவர்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இறுதிப்போட்டியில் ரகுமான், சிம்பு, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment