பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலம் பாலாஜி அள்ளிய பரிசு தொகை, சம்பளம் எவ்வளவு தெரியுமா.? நிரூப், ரம்யா பாண்டியன் சம்பள விவரம் இதோ.!

bigboss ultimate
bigboss ultimate

விஜய் டிவி தொலைக்காட்சி பிக்பாஸ்  நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு  வருகிறது இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6 வது சீசனை மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில் உடனடியாக ஹாட்ஸ்டார் OTT தளம் உடனடியாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை வெளியிட்டது.

பிக்பாஸ் வீட்டில் விளையாண்ட அனுபவ போட்டியாளர்களை களத்தில் இறங்கியதால் ஆரம்பத்திலேயே சண்டை சச்சரவும் வீட்டில் அதிகமாக இருந்தது இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கூட கணிக்க முடியாத அளவிற்கு இருந்தது ஏனென்றால் ஒவ்வொரு வாரமும் போட்டியாளரும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.

இப்படி இருந்த நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 70 நாட்கள் தொட்டு முடிவு பெற்றது இதில் டைட்டில் வின்னராக பாலாஜி முருகதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார் இரண்டாவது இடத்தை நிரூப் மூன்றாவதாக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மூவருக்கும் எவ்வளவு பரிசுத் தொகை மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பயணத்திற்காக எவ்வளவு சம்பளம் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இறுதிநாளில் பாலாஜி வெற்றிபெற்றதாக அறிவித்தார். கோப்பையை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவருக்கு பரிசுதொகையாக 35 லட்சம் கொடுக்கப் பட்டது மேலும் பிக் பாஸ் வீட்டில் 70 நாள் பயணத்தை அதற்காக ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் போட்டு மொத்தத்தில் இவருக்கு 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இரண்டாவது இடத்தைப் பிடித்த நிரூப் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைத்துள்ளது மூன்றாவது இடத்தை பிடித்த ரம்யா பாண்டியனுக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதை வைத்து பார்க்கும்போது மிகப்பெரிய ஒரு தொகையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.