இரண்டாவது திருமணத்துக்கு ரெடியானா விஷ்ணு விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்!!

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகர் என்ற  விஜய் விருதை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் குள்ளநரி கூட்டம், நீர்பறவை ,முண்டாசுபட்டி இன்று நேற்று நாளை பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க ராட்சசன்போன்ற சிறந்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவர் அடுத்ததாக அமலா பாலை காதலித்து வருவதாக தகவல் வெளிவந்தன. அதனை முற்றிலுமாக விஷ்ணுவிஷால் அவர்கள் மறுத்த நிலையில் தற்பொழுது பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அதனை உறுதிபடுத்தும் விதமாக ஜுவாலா எனக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையே நல்ல உறவு நீடிக்கிறது என பேசினார்.

vishnu
vishnu

இந்த நிலையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறோம் அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக தேதியையும் அறிவிப்போம் என கூறியிருந்தார். விஷ்ணு விஷால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பது தெளிவாகிறது.

Leave a Comment