சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சில முக்கிய நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன. அப்படி டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளிகளுக்கும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் உள்ளது. அப்படிப்பட்ட முக்கிய தொகுப்பாளர்கள் சிலர் சின்னத்திரையில் இருந்து காணாமல் போய்விட்டன. அவர்கள் யார்யார் என்பதை பார்ப்போம்.
திவ்யதர்ஷினி :
தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இவர் விஜய் தொலைக்காட்சியில் தனது இளம் வயதிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அப்படி ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, அன்புடன் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் ஆனால் தற்போது இவர் சில காலமாக அதிகம் சின்னத்திரை பக்கம் தலை காட்டுவதில்லை.
வீஜே அஞ்சனா :
அடுத்து வீஜே அஞ்சனா இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம்வந்தார். அஞ்சனாவுக்காகவே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பல ரசிகர்கள் கண்டுகளித்து வந்தனர். ஆனால் தற்போது பல வருடங்களாக இவர் சின்னத்திரை பக்கம் தென்படவில்லை.
வீஜே பாவனா :
இவரை தொடர்ந்து அடுத்து வீஜே பாவனா இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நடன நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருந்தார். பின்பு இவர் கிரிக்கெட் கபடி போன்றவற்றில் கமெண்டராக இருந்து வரும் பாவனா சின்னத்திரை பக்கம் வராமல் சென்றுவிட்டார்.
வீஜே ஜாக்குலின் :
அடுத்து வீஜே ஜாக்குலின் இவர் விஜய் டிவியில் kpy நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் அடைந்தார். ஆனால் என்னவென்று தெரியவில்லை தற்போது விஜய் டிவி பக்கமே ஜாக்குலின் தென்படவில்லை.
வீஜே அர்ச்சனா :
அடுத்து வீஜே அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் பெரிதும் பிரபலமடைந்தவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தொகுப்பாளினிகளில் முக்கிய ஒருவராக பார்க்கப்பட்டார் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தற்போது வெவ்வேறு துறையில் பயணித்து வருகிறார் அர்ச்சனா.