மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல முக்கிய நடிகர்.! யார் தெரியுமா அது.?

பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது அவ்வாறு பார்த்தால் டிஸ்கவரி தொலைக்காட்சியில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி விட்டது என்றுதான் கூறவேண்டும் டிஸ்கவரி சேனலில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள்கள் தனி வரவேற்பு தருகிறார்கள் குறிப்பாக இதில் பங்கேற்கும் பியர் கிரில்ஸ் பல விஷயங்களை காட்டுக்குள் மக்களுக்கு கற்றுக் கொடுப்பார்.

இவர் தனியாளாக பல அடர்ந்த காடுகளில் எப்படி உயிர் பிழைப்பது என்பது பற்றி மக்களுக்கு சொல்லித் தருவதால் இவரும் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார் என்று தான் கூற வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றார் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அனுபவத்தை விட இதில் பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் கூறி வந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்தா என்ற திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக முடிந்துள்ளது இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலானதை நாம் பார்த்திருக்கலாம்.

இதனை  தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு பல விஷயங்கள் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் பயிற்சியில் பங்கேற்றார் இவரைத் தொடர்ந்து தற்பொழுது ஒரு பிரபலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்துள்ளார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஆம் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் எனவும் இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்று முடிந்துள்ளது எனவும் கூடிய சீக்கிரம் இந்த நிகழ்ச்சி மக்களிடையே ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.

Leave a Comment