ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் ஆப்பு வைத்த போலிஸ்.! TTF வாசனின் பரிதாப நிலை…

தமிழகத்தில் youtube சேனல் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம் அப்படி youtube சேனல் மூலம் பிரபலமானவர்தான் TTF வாசன். இவர் கிரெஞ்சாக பேசுவது அதிவேகத்தில் பைக் ஓட்டுவது என அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்துவை இவர் பைக்கில் வைத்து அழைத்துச் சென்றபோது அதை வீடியோவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தான் youtube பிரபலம் TTFக்கு  தலைவலியாக மாறியது.

ttf
ttf

அந்த வீடியோவில் அவர் பைக்கை 150 கிலோமீட்டர் வேகத்தில் அதிகமாக ஓட்டியது பதிவாகி இருந்தது. இதனால் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் ஓட்டியதாக TTF வாசன் மீது சூலூர் மற்றும் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு செய்த பிறகு என்னிடம் மோத வேண்டாம் என எச்சரிக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கெத்து என நினைத்து கொண்டு இருந்த TTF வாசனை தற்போது கொத்தாக மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். சேலம்- கொச்சின் நெடுஞ்சாலையில் அதிவேகமாகவும் ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் பைக் ஓட்டிய வழக்கில் TTF வாசனை பொலிஸார் கைது செய்தனர்.

ttf
ttf

மேலும் youtube பிரபலம் TTF வாசன் பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது அவரை சூலூர் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்ததாக கூறப்படுகிறது இதை அடுத்து TTF வாசனை காவல் நிலைய பிணையில் போலீசார் விடுவித்துள்ளனர்.

கைதாகி விடுதலையான பிறகு TTF வாசன் நான் செய்தது தவறு தான் என பேசி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த நெட்டிசங்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இவரை கைது செய்ததற்கு முக்கியமான காரணம் இவர்களுடைய ரசிகர்கள் தான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் யூடியூபில் இவரை அதிக பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் அதிவேகத்தில் செல்வதால் இவரைப் போலவே தற்போது உள்ள இளைஞர்களும் அதிவேகமாக பைக்கில் செல்வார்கள் என்றும் இதனால் அதிகமாக விபத்துக்கள் நடக்க நேரிடும் எனவும் இதனால்தான் TTF வாசனை கைது செய்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment