சந்தானம் பெற்றோர் மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகிறது!!

0

காமெடி நடிகராக திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். காமெடியில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த வடிவேலு, கவுண்டமணி, செந்தில் ஆகியோர்களுக்கு அடுத்ததாக சந்தானம் தான் காமெடியில் கலக்கி வந்தார்.

அதன்பிறகு இவர் ஹீரோவாக நடிக்க ஆசை பட்டதால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சக்கபோடு போடு ராஜா, டகால்டி, இனிமே இப்படிதான் உட்பட இன்னும் சில படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவர் முதலில் வின் டிவியில் ஒளிபரப்பாகி வந்த டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவ்வாறு படிப்படியாக உயர்ந்த சந்தானம் தனது சின்ன வயதில் அம்மா, அப்பா, தங்கை இவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அது மட்டுமல்லாமல் சந்தானத்தின் திருமண புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சந்தானம் சின்னவயதில் கொழுகொழுவென்று மிகவும் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

santhanam
santhanam
actor Santhanam
actor Santhanam