களத்தில் இறங்கி வேலை செய்த விஜய் மக்கள் இயக்கம்!! பாராட்டும் தமிழக மக்கள்.!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு அதில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தற்போது அதிரடியான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் தளபதி விஜய். அந்த வகையில் நெல்சன் தீலிப் குமார் அவருடன் இணைந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்த இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்துவருகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் உள்ளது சென்னை வந்த படக்குழு இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது ஒரு பக்கமிருக்க விஜய்யின் மக்கள் இயக்கம் தற்போது கொரோனா காலகட்டத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக கொரோனா உதவிகள் செய்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் ப்ளூ ஸ்டார் வாட்டர் டிஸ்பென்சர் ( hot, pain, cold ) = 2 no’s.

Adlisc CPAP face Mask = no’s. இத்தகைய பொருள்களை கொடுத்ததோடு கொரோனா வார்டில் தனது உயிரை வைத்து பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் 31 பேருக்கு ரூ.500 கொடுத்து அவர்களுக்கு ஊக்குவித்து உள்ளனர் தளபதி விஜய் மக்கள் இயக்கம்.

அதன் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதோடு புகைப்படத்தை பார்த்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment