மதுரை மக்கள் இப்படி பட்டவர்கள்தான்- 14 வருடங்கள் கழித்தும் இன்னும் பேசுகிறார்கள்.! புதிய பதிவு போட்டு அசத்திய நடிகர் கார்த்தி.

சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பவர் நடிகர் கார்த்தி இவர் ஒரு வாரிசு நடிகராக இருந்தாலும் சினிமா உலகம் எப்படிப்பட்டது என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றார்போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

நடிகர் கார்த்தி பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் ஆக்சன், காமெடி, ரோமன்ஸ், சென்டிமெண்ட் என எல்லா படங்களிலும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு விருந்து படைத்து வருவதால் தற்போது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார் .

மேலும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் தற்போது இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விருமன் திரைப்படம் மதுரையில் சூட்டிங் நடத்தப்படுகிறது இந்த திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஹீரோயினாக முதல் முறையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் கிராமத்து பின்னணியை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாக தெரிய வருகிறது அதனால் இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என தெரியவருகிறது. இந்த நிலையில் மதுரையில் விருமன் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது இதற்காக அங்கு சென்றுள்ளார் கார்த்தி அப்போது மதுரை மக்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் 14 வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த பருத்திவீரன் படத்தை இப்பொழுது பேசி அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இதை கண்ட மதுரை மக்கள் தான் இன்னும் பழசை மறக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்கள் என கூறி கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 14 வருடங்கள் ஆகியும் பருத்திவீரன் படத்தை இப்பொழுது நினைவுகூர்ந்து என்னைப் பற்றிப் பேசுவது எனக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது எனக்கூறினார்.  மதுரை மக்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக உணர்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Comment