நடிகை வனிதா விஜய்யுடன் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப் படத்தில் நடித்ததால் ஃபேமஸ் ஆனாரோ இல்லையோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இந்த நிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தது.
இவரின் மூன்றாவது திருமணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், இந்தநிலையில் பெண் ஒருவர் மிகவும் தைரியமாக வனிதாவை கேவலமாக விமர்சித்து வருகிறார், அவர் கூறியதாவது நீ தைரியமான பொம்பளையாக இருந்தால் உன் யூடியூப் சேனலில் கமெண்ட் பாக்ஸ் ஐ ஆன் செய்து வை என மோசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து வனிதா அந்தப் பெண்மணியை மோசமாக ரைட் விட்டார், அதுமட்டுமில்லாமல் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களையும் கடுமையாக தாக்கி பேசினார் வனிதா. இந்த நிலையில் வனிதா தைரியமாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார், இப்படி இருக்கும் நிலையில் வனிதாவை மோசமாக விமர்சித்த சூர்யா தேவி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் சூர்யா தேவி கஞ்சா வியாபாரம் செய்யும் ஆடியோவை வனிதாவின் லாயர் லீக் செய்தார் அதனை தொடர்ந்து பல சினிமா பிரபலங்களை அவர் தெரிந்து வைத்துள்ளார் அந்த வகையில் ஒரு ஒரு புகைப்படமாக தினமும் லீக்காகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
