750 படத்துக்கு மேல் நடித்த கோவை சரளாவின் மறுபக்கம்.!! திருமணம் ஆகாத காரணம் குறித்து?

0

நகைச்சுவை நடிகை கோவை சரளா 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மனோரமாவிற்கு பிறகு பெண்களில் நகைச்சுவை நடிகை என்றால் கோவை சரளா தான் என்று அனைவருக்கும் தெரியும். இவர் நகைச்சுவை நடிகையாக மட்டுமல்லாமல் நடிகர் கமல்ஹாசனுக்கு ஹீரோயினாகவும் நடித்துளளார்.

இவர் கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் தனது சிறந்த நகைச்சுவை நடிப்பை வெளிபடுத்தினார்.இவர் 1983ல்  பாக்யராஜின் முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதைத்தொடர்ந்து கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம்  தனது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தார்.

மேலும் 2008 லிருந்து 13 வரை படவாய்ப்புகள் பெரிதாக இல்லாமல் இருந்தது. அதன் பின் 2013 இல் காஞ்சனா திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து பல படங்களில் இன்று வரை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர். இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தார். இவருக்கு திருமணம் செய்ய தாமதமாகி விட்டது. எனவே இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டார். தற்போது இவர்களின் சகோதரர், சகோதரர்களின் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் முதியோர் இல்லங்களுக்கு சென்று தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.