எனக்கு மிகவும் பிடிக்காத நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் தான்.! என, காரணத்தை கூறிய அர்ச்சனாவின் மகள் சாரா..

0
saara
saara

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல நபர்கள் மக்களிடையே பிரபலமானவர்கள். மேலும் இதன் மூலம் அனைவரும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் ஒருவரான அர்ச்சனா, முதன் முதலில் சன் தொலைக்காட்சிகள் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.

என்னதான் சன் டிவியில் வேலை செய்திருந்தாலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் அதன் மூலம் மக்களிடையே முகம் தெரியும் நபராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது, இதற்குப் பின் தான் அர்ச்சனா ஜீ தமிழில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு இவர் செய்த ஒரு சில காரியங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை ஏனென்றால் இவர் மற்றும் இவரது அன்பு கேங்கை தவிர்த்து மீதமுள்ள போட்டியாளர்களை வெளியேற்ற பல காரியங்களை திட்டமிட்டு செய்துள்ளார் அர்ச்சனா, அதனால் இவரது இமேஜும் உடைந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்பு விஜய் தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்ட ஒரு சில நிகழ்ச்சிகளை அர்ச்சனா தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு மறுபடியும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் மாம் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதாவது இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா தன்னுடைய மகளுடன் சூப்பர் மாம் 3 சீசனில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் அர்ச்சனாவின் மகள் சாரா வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அது என்னவென்றால், விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனது அம்மாவின் முழுமையான கேரக்டரை காட்டாமல் அவரது நெகட்டிவ் மட்டும் காட்டப்பட்டது, எனக்கு என்னுடைய அம்மா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு இவர் கூறியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அர்ச்சனாவின் மகளுக்கு சிறிய வயதாக இருந்தாலும் தன்னுடைய அம்மாவை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு மிகவும் நன்றாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர்கள் கலந்துக் கொண்ட பேட்டி கூட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.