ஒரே ஒரு பதிவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் காண்டாக்கிய ப்ளூ சட்டை மாறன்.! என்னடா டான் படத்திற்கு வந்த சோதனை.

0
don blue
don blue

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களையும் ஒரு சில தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கயுள்ளார்.சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் இன்று வெளியாகிறது.

அந்த வகையில் டான் திரைப்படம் இன்று காலை 4 மணி ஷோ அனைத்து திரையரங்கிலும் வெளியானது. இந்த படத்தை பார்க்க நேரடியாக நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றி திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பார்த்த ரசிகர்கள்  புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

டான் திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பையும்  நல்ல விமர்சனத்தையும் கொடுத்தாலும் ஒருவர் மட்டும் அதற்க்கு எதிர்மறையாக டான் படத்தை கடும் மோசமாக தாக்கியுள்ளார். ஆம் ப்ளூ சட்டை மாறன்  தற்போது வரையிலும் எந்த ஒருத்தரை படத்திற்காகவும் சரியான விமர்சனங்களை கொடுப்பதில்லை அதற்கு எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டார்.

மற்ற திரைப்படத்தைப் போல தற்போது டான் திரைப்படத்தையும் மறைமுகமாக தாக்கியுள்ளார். அதுவும் ஒரு தியேட்டரில் டான் திரைப்படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள்  படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது தூங்குவது போல புகைப்படத்தை எடுத்து தனது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து  ப்ளூ சட்டை மாறனை கடுமையாகத் திட்டி தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.