இந்த ஒரே காரணத்தினால் தான் மருதநாயகம் திரைப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன்..! பேட்டியில் உண்மையை உடைத்த நெப்போலியன்..!

தமிழ் திரை உலகில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் நடிப்பு என பல்வேறு வகையில் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் கமலஹாசன் தயாரிப்பில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களும் வெற்றி பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

என் நிலையில் கமலஹாசன் தயாரிப்பில் உருவாக இருந்த மருதநாயகம் திரைப்படம் மற்றும் பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  அந்த வகையில் இந்த திரைப்படம் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்க உள்ளதாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இளையராஜாவும் இசையமைக்க முன்வந்தார் ஆனால் இந்த  திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

பின்னர் இந்த திரைப்படத்தை எடுக்க மீண்டும் பல்வேறு முயற்சிகளை செய்துள்ளார்கள் ஆனால் அந்த முயற்சிகள் நீண்டநாள் செல்லாமல் பாதியிலேயே கைவிடப்பட்டது.  இந்நிலையில் மருதநாயகம் திரைப்படத்தை மீண்டும் எடுக்க கேட்டபோது கமலஹாசன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என நெப்போலியன் கூறியுள்ளார்.

நெப்போலியன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகராக வலம் வந்தவர்.இவர் தமிழ் சினிமாவில் 1993ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் அதன் பின்னர் பல திரைப்படங்களில் இவர் ஹீரோவாக நடித்துக் காட்டியவர்.

அதுமட்டுமில்லாமல் நாளடைவில் வில்லனாகவும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் நெப்போலியன் கமலஹாசன் மருதநாயகம் படத்திற்கு மறுப்பு தெரிவித்தது பற்றி கூறியுள்ளார்.  அந்த வகையில் கமல் நெப்போலியன் நடித்த சீவலப்பேரி பாண்டி என்ற படத்தை பார்த்து பாராட்டினாராம்.

பின்னர் என்னை மருதநாயகம் திரைப் படத்தில் நடிப்பதற்காக அழைப்பு கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு கொடூரமான வில்லன் கதாபாத்திரம் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் நான் அப்பொழுது ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் ஆகையால் நான் வில்லனாக நடிக்க மறுப்பு கூறிவிட்டேன். பின்னர் விருமாண்டி திரைப்படத்தில் கூட எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை கமல் கொடுத்திருந்தார்.

Leave a Comment