தமிழ் சினிமாவில் கெஸ்ட் ரோல் பண்ணாத ஒரே ஹீரோ.. லோகேஷின் வெற்றிக்கான சீக்ரெட் இதுதான்

சினிமா உலகில் ஹீரோவாக இருக்கும் ஒவ்வொரு நடிகரும் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதிலேயே அதிகம் கவனம் காட்டி வந்தனர். ஆனால் திரை உலகம் புதியதை நோக்கி ஓட ஓட ஹீரோகளும் தன்னை மாற்றிக் கொள்கின்றனர் அந்த வகையில் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர், நடிகைகள் கெஸ்ட் ரோலில் நடித்து கைதட்டல் வாங்குகின்றனர்.

அதிலும் குறிப்பாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை எடுத்த படங்களில் பல முன்னணி ஹீரோக்கள் கெஸ்ட் ரோல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கின்றனர். இதுவரை சூர்யா போன்றவர்கள் பல முன்னணி பிரபலங்கள் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். “லியோ” படத்திலேயும் பல்வேறு டாப் நடிகர்கள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

அதில் எத்தனை பேர் கெஸ்ட் ரோலில் நடிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களிலும் பல ஹீரோக்கள் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் லோகேஷின் படம் பெரிய வெற்றிப்பெறுகிறது என பலரும் சொல்லுகின்றனர். அந்த அளவிற்கு தற்போது ட்ரெண்ட் மாறிப்போயிருக்கிறது ஆனால் ஒரே ஒரு நடிகர் மட்டும் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து.

அவரது சினிமா பயணம் முடியும் வரை கெஸ்ட் ரோலில் நடித்ததே கிடையாது அந்த பிரபலம் யார் என்பது குறித்து பார்ப்போம்..  தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். இவர் தனது திரை பயணத்தில் ஹீரோ, வில்லன் என பல கெட்டப்புகளில் நடித்தாலும் எந்த ஒரு படத்திலும் இவர் இதுவரை கெஸ்ட் ரோலில் நடித்ததே கிடையாதாம்..

நடிப்பிற்கு பெயர்போன சிவாஜி கணேசன் தொடங்கி பல முன்னணி ஹீரோக்கள் கேஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர் ஆனால் எம்ஜிஆர் மட்டும் இதில் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் அவர் ஒருவர் தான் கெஸ்ட் ரோலில் நடிக்காமல் படம் முழுவதும் ஹீரோ, வில்லன்னாகவே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment