எம்ஜிஆர் வாங்க மறுத்த ஒரே ஒரு பட்டம் – டாக்டர் பட்டம் மட்டும் தான்.! என்ன காரணம் தெரியுமா.?

70 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை தன் கையில் வைத்து வலம் வந்தவர் நாம் நடிகர் எம்ஜிஆர் தான். சினிமா உலகில் வந்தோம் போனோம் என்று இல்லாமல் மக்களுக்கு கருத்துகளை எடுத்துரைக்கும் பல படங்களை கொடுத்து மக்களை சிந்திக்க வைத்தவர் மேலும் அதன் மூலமும் சந்தோஷமும் பட வைத்தார்  எம்ஜிஆர் இதனால் கோடான கோடி மக்களை தன் பக்கம் ஈர்த்தார்.

ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் சுமாரான படங்களில் நடித்தால் கூட அந்த படங்கள் தொடர்ந்து வெற்றியை ருசித்து விடும் அந்த அளவிற்கு மக்கள் கூட்டத்தை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார் இப்படி சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த இவர் அரசியலிலும் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.

ஒரு சமயத்தில் முதலமைச்சர் சாசனத்தில் உட்கார ஆசைபட அதை மக்களும் செவ்வனே செய்து வெற்றி பெறச் செய்து அழகு பார்த்தனர். அதுவும் ஒரு தடவை, இரு தடவை அல்ல பலமுறை எம்ஜிஆர் முதலமைச்சராக  எம்ஜிஆர் சினிமா ஒரு பக்கம் கையாள மறுபக்கம் மக்களையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.

இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களை தன்பக்கம் வைத்திருந்தவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் நடிகனாக இருந்தாலும் முதல் அமைச்சராக இருந்தாலும் மக்களுக்கு என்றால் ஓடி வருவார் அதை மக்களும் அப்போது நன்கு அறிந்திருந்தனர் இதனால் என்னவோ ரசிகர்கள் மக்களும் அவரை செல்லமாக பல்வேறு பெயர் வைத்து அழைத்தனர்.

வாத்தியார், பொன்மனச்செம்மல், மக்கள் செல்வன் போன்ற பல பெயர்களை வைத்து அழகு பார்த்தனர் ஆனால் ஒரே ஒரு படத்தை மற்றும் அவர் வாங்க மறுத்தார் அது டாக்டர் பட்டம் தான் திரை உலகில் எத்தனையோ பேர் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முன் வந்தனர் ஆனால் அவரோ அதை மட்டும் வேணாம் என ஒத்த காலில் நின்று மறுத்துவிட்டாராம்.

ஏன் என்று கேட்டதற்கு பல உயிர்களை காப்பாற்றி சமூகத்தில் மதிப்பும் மரியாதையுடனும் இருப்பவர்கள் அவர்கள் அவர்களைப் போல் ஒரு உயிரை காப்பாற்ற முடியாது. எனவே டாக்டர் பட்டம் வேண்டாம் என அவர் மறுத்து விட்டாராம்.

Leave a Comment