உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்தது.! கதாநாயகி இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ஆதவன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

தொடர்ந்து ஒருகல், ஒருகண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா,  மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தற்பொழுது இவர் கண்ணை நம்பாதே, ஏஞ்சல் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதனை அடுத்த நடிகர் உதயநிதி ஸ்டாலின்னை வைத்து இயக்குனர் மகிழ் திருமேனி ஒரு படம் இயக்கப் போவதாக ஒரு சில நாட்களுக்கு முன்பே தகவல்கள் வெளிவந்திருந்தன.

அந்த வகையில் தற்போது  ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன் பதினான்காவது படமாக அமைகிற இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போவதாக தகவல்கள்  வெளிவந்துள்ளது. இந்தப்படத்தில் உதையநிதிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்க இருக்கிறார்.

இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியானது.

இதோ அந்த புகைப்படம்;

uthayanithi
uthayanithi

Leave a Comment