கர்ணன் திரைப்படத்தில் நான்காவது பாடலைப் பற்றி திடீரென வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தனுஷ் ஆரம்பகால கட்டத்தில் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இவர் தற்போது நடித்து வரும் பல திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன்,குட்டி,ஆடுகளம் போன்ற பல படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து இவரது நடிப்பில் தற்போது அந்தராங்கி ரே,கர்ணன் போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது கர்ணன் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல்9 ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி யூடியூபில் ரசிகர்களை அதிகம் பார்க்க வைத்து சாதனை படைத்துவருகிறது.

இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது கர்ணன் திரைப்படத்தின் நான்காவது பாடல் தான் இந்தப் பாடலைப் பற்றி தற்பொழுது ஒரு தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த நான்காவது பாடல் நாளை வெளியாக உள்ளது என கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் பதிவு செய்த தகவலை தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment