“நானும் ரவுடிதான்” படத்தில் முதன் முதலில் நடிக்க ஆஃபர் வந்தது இந்த நடிகருக்கு தானாம் – அப்புறம் தான் விஜய்சேதுபதி.!

விஜய் சேதுபதி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், பார்த்திபன், நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஆனந்தராஜ் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தனர்.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து கதை நகர்ந்து இருந்து இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் கூட்டத்தை திரையரங்கு பக்கம் இழுத்தது மேலும் அதிக நாட்கள் ஓடியது மேலும் நல்லதொரு வசூல் வேட்டையை நடத்தியது.

இதனை பிறகு விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவனின் மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் அதிகரித்தது.மேலும் இந்த திரைப்படத்தில் நடித்தவர்களும் அடுத்த அடுத்த படத்தை கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நானும் ரவுடிதான் படம் குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது 2013ம் ஆண்டு விக்னேஷ் சிவன் முதலில் அனிருத்தை நடிக்க வைத்து படத்தை எடுக்க நினைத்தார் ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த படத்திலிருந்து அனிருத் விலகினார். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர்களுக்கு இந்த படத்தில் நடித்தனர்.

இந்த நிலையில் ஓ மை கடவுளே பட நடிகர் அசோக்செல்வன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார் அதாவது நானும் ரவுடிதான் படம் குறித்து ஒரு தகவலை கூறி உள்ளார் அதாவது இந்த படத்தின் ஆஃபர் முதலில் செல்வராகவனுக்கு தான் வந்தால்தான் அந்த ஆஃபரை கொடுத்ததை விஜய்சேதுபதி தான் ஆனால் சில காரணங்களால் அசோக் செல்வன் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை அடுத்து அந்த படம் மீண்டும் விஜய் சேதுபதி பக்கமே திரும்பியதாம்.

Leave a Comment