அடுத்த சாதனை படைத்த “அண்ணாத்த” படம் – இப்போ எதில் தெரியுமா.? ஆச்சரியப்படும் சினிமா உலகம்.

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி மக்கள் கூட்டத்தை அலைகடலென திரையரங்கு பக்கம் இழுத்து வரும் படம் தான் அண்ணாத்த திரைப்படம்.

இந்த படம் கிராமத்து கதையை மையமாகக் கொண்டிருப்பதால் தற்பொழுது இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் விமர்சனங்களையும் தாண்டி வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

அண்ணாத்த திரைப்படம் ரஜினி கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக அமையும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அண்மையில் கூட இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன், தனுஷ், கவின் ஆகியவர்கள் பார்த்து வந்த நிலையில் நல்ல விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு நாட்களுக்குள் மட்டுமே 100 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் டிக்கெட் புக்கிங் மட்டுமே ஒரு மில்லியன்னை தற்போது தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் குறைந்த நாட்களிலேயே ஒரு மில்லியன் டிக்கெட்டை  விற்று புதிய சாதனை படைத்தது உள்ளது.

இதுவே முதல் முறை என பலரும் கூறி இச்செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வருகின்ற நாட்களில் பல புதிய சாதனைகளை படைப்பதோடு மட்டுமில்லாமல் இருக்கின்ற பழைய சாதனையை உடைக்க இருக்கிறது.

Leave a Comment

Exit mobile version