“RRR” படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா.. கேட்ட முன்னணி நடிகர்கள் – ராஜமௌலி சொல்லிய வார்த்தைகள் என்ன தெரியுமா.?

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் பல படங்களை இயக்கி வெற்றி காட்டு வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. இவர் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிறு  இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட பட்ஜெட்டில் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் தான்  RRR.

இந்த படம் முன்பே தொடக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தால் படம் ரிலீஸ் ஆகாமல் இழுத்துக்கொண்டே போனது ஒரு வழியாக கடந்த மாதம் 24ஆம் தேதி கோலாகலமாக உலக அளவில் திரையரங்கில் படத்தை ரிலீஸ் செய்தது பாகுபலியை போலவே இந்த படமும் இருக்கும் என ரசிகர்கள் கருதினார் அதைவிட ஒருபடி சிறப்பாக இருந்தது RRR.

படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த படமாக திரையரங்கை நாடி மக்கள் மன்றம் ரசிகர்கள் திரைஅரங்கை நாடி பார்த்து கொண்டாடி வருகின்றனர் அந்த காரணத்தினால் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி கொண்டே போகிறது உலகம் முழுவதும் தற்போது வரை ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில் வட மாநிலங்களில் ரிலீஸ் உரிமையை வாங்கிய பென் நிறுவனம் RRR படத்தின் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது அமீர்கான், கரன் ஜோகர், ஜாவித் அக்தர் உட்பட பலர் வந்திருந்தனர் அப்பொழுது RRR படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண்னும் கலந்துகொண்டனர் இவர்கள் இருவரும் RRR படத்தின் அடுத்த பாகம்  தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்த எஸ் எஸ் ராஜமௌலி இன்னும் சில காலம் ஆகட்டும் அது எனக்கும் மகிழ்ச்சிதான் அது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை இடம் என்பதால் அல்ல என் தம்பிகள் ஜூனியர் NTR மற்றும் ராம்சரணுடன் அதிக நேரம் செலவிடலாம் என்பதால்தான் ஆனால் அதற்கு நேரம் வரட்டும் என கூறியுள்ளார். இப்படி சொல்லி உள்ளதால் நிச்சயம் RRR படத்தின் அடுத்த பாகம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment