ஒரே வருடத்தில் அடுத்து அடுத்து 3 படம் தளபதி விஜய் போடும் பக்கா மாஸ்டர் ப்ளான்.! ஓரகவுட் ஆகுமா.?

விஜய் சேதுபதி மற்றும் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி ரசிகர்களிடையே வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 65 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கப் போகிறார் என எப்பொழுதே ரசிகர்களுக்கு வெளியிடப்பட்ட தகவலாகவும்.

மேலும் அந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போகிறது எனவும் கூறி வந்த நிலையில் தற்போது அந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் படப்பிடிப்பு ஆரம்பித்து 2022 ஆம் ஆண்டு பொங்கலில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து தளபதி விஜய் 66வது திரைப்படத்தை இந்த இந்த வருடம் கடைசியில் தொடங்க உள்ளதாகவும் அந்த திரைப்படம் 2022ஆம் ஆண்டு கோடை காலத்தில் ரசிகர்களுக்கு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தளபதி 67ஆவது திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து அந்த திரைப்படத்தை 2022ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அல்லது 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரசிகர்களுக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் விஜய் நடிக்கப் போகும் இந்த திரைப்படங்களை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் AGS லைக்கா புரொடக்சன்ஸ் தேனாண்டாள் பிலிம்ஸ் போன்ற அனுபவமிக்க நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment