இணையத்தை தெறிக்க விடும் வாத்தி படத்தின் புதிய அப்டேட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்டூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பாராசூரன் திரைப்படமும் நாளை வெளியாக இருக்கிறது.

இதனால் இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்ரே சொல்லலாம். இதனை தொடர்ந்து இந்த இரண்டு படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருந்த பாகாசுரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் கிலிப்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தது ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேவதையை மாற்றி வைத்தனர்.

அந்த வகையில் வாத்தி படத்தின் ரிலீஸ் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது அந்த வகையில் நாளை வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது இதனை தொடர்ந்து தற்போது வாத்தி திரைப்படத்திலிருந்து மேலும் ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது.

அதாவது வாத்தி படத்தின் சென்சார் அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் வாத்தி திரைப்படம் யூ சான்றிதழ் பெற்றிருக்கிறது இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த அப்டேட் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment