அதிரடியாக வெளியான பத்து தலை படத்தின் புதிய அப்டேட்.! தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள்…

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகனாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் சினிமாவில் இடைப்பட்ட காலத்தில் இவர் நடிக்கும் சில படங்கள் சரியாக ஓடவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அது மட்டுமல்லாமல் இதற்கு முக்கிய காரணம் அவர் உடல் எடை அதிகரித்து இருந்தது தான் என்று கூறபடுகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் மறுபடியும் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒரு தரமான கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் சிம்புவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இதனை தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்த சிம்பு அவர்கள் பாங்காங் சென்று இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழு அறிவித்திருந்தது இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது வருகின்ற மார்ச் 3ஆம் தேதி ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக பட குழு அறிவித்திருக்கிறது அது என்னவாக இருக்கும் என தற்போது ரசிகர்கள் மண்டையை பிச்சு கொண்டு வருகிறார்கள் ஒருவேளை பத்து தல படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நம்ம சத்தம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த அப்டேட் ரசிகர்களுக்கு ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment