“வலிமை” படத்திலிருந்து நீக்கப்பட்ட புதிய காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது – செம்ம மாஸ்ஸா இருக்கு..

அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக பிப்ரவரி 24 ஆம் தேதி கோலாகலமாக வெளியானது. அஜித்தின் வலிமை திரைப்படம் முதன் முதலாக தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற வருகிறது.

இருப்பினும் ஆரம்பத்தில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்ததை உணர்ந்துக் கொண்ட படக்குழு. உடனடியாக படத்திலிருந்து 14 நிமிட காட்சிகளை கட் செய்து எடுத்து அதன் பின் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் ரசிகர்களையும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்து.

குறிப்பாக பெண் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளதாக அவர்களே கூறி வருகின்றனர். வலிமை படத்தில் நடிகர் அஜித்திற்கு இணையாக ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு,  புகழ், சைத்ரா ரெட்டி, ஜி எம் சுந்தர் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். ‘

படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் தொடர்ந்து வசூலை அள்ளி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வலிமை படத்திற்கான வரவேற்பு வேற லெவலில் வசூல் அடித்து நொறுக்குகிறது ஓடிக்கொண்டிருக்கிறது உலக அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து டெலிட் சீன்கள் சில யூடியூபில் வெளியிடப்பட்ட தற்பொழுது வைரலாகி வருகிறது அதன்படியே இப்பொழுது ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ ரசிகர்களை கவர்ந்து இழுத்தது இதோ அந்த டெலிட் வீடியோ.

Leave a Comment