மாஸ்டர் படத்தை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த “டாக்டர்” படம்.! வெளியான தகவல் அதிர்ந்த தளபதி ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களின் படங்கள் கொரோனா தாக்கம் காரணமாக சமிப காலமாக OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் ஒரு சில உச்ச நட்சத்திரங்கள் நாங்கள் எப்பாடு பட்டாலும் திரையரங்கில் தான் படத்தை வெளியிடுவோம் என முட்டி மோதி ஒருவழியாக திரையரங்கில் ரிலீஸ் செய்தனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு முதலே விஜய் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அலை அலையாக மக்கள் கூட்டத்தை இந்த திரைப்படம் இழுத்தது. படம்  முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்களுக்கு பிடித்துப்போன படமாக மாறியது.

மேலும் மாஸ்டர் திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மக்கள் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருவதுதான் டாக்டர் திரைப்படம். திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரையிலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை டாக்டர் திரைப்படம் 60 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ள நிலையில் தற்போது வெற்றிகரமாக ஓடுகிறது.இந்த நிலையில் USA -லும் அதிக வசூல் சாதனை செய்த படமாக சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் இருக்கிறது மேலும் மாஸ்டர் திரைப்படம் அதிக வசூலை ஈட்டிய நிலையில் அதையே தற்போது முறை அடித்து முதலிடத்தில் இருக்கிறது டாக்டர்.

USA வில் அதிகமாக மாஸ்டர் $ -439  k பெற்றிருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம்$ – 440k அள்ளி தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இச்செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டு தற்போதைய தீயாய் பரவி வருகிறது.