முதல் நாளே வசூலில் புதிய சாதனை படைத்த “அண்ணாத்த” படம் – எவ்வளவு கோடி அள்ளியுள்ளது தெரியுமா.?

சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் பல நாட்கள் கழித்து கொரோனா தொற்று காலத்திலேயும்  படங்களை விற்காமல் பொறுமையாக திரையரங்கில் வெளியிட்டு மக்கள் மற்றும் ரசிகர்களை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் விஜய் ஆரம்பத்திலேயே மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் செய்து காட்டிவிட்டார். அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதன் பின் தற்போது தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் நேற்று வெளியானது.

முதலில் 50% இருக்கைகள் ஆரம்பத்தில் இருந்தாலும் தற்போது 100% அனுமதி கொடுத்து உள்ளதால் படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.ரஜினிகாந்த் பல வருடங்களாக சினிமா உலகில் நிலைத்து நிற்பதால் அவருக்கான ரசிகர்களும், மக்களும் அவருக்கு பக்கபலமாக இருப்பதால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

அந்த வகையில் இந்த திரைப்படமும்  நல்ல வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல கிராமத்து கதையை கையில் எடுத்து நடித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. அண்ணாத்த படத்தின் டிக்கெட் புக்கிங் முதல் நாள் மட்டுமே சுமார் 10 கோடிக்கு மேல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் வெளிநாட்டில் மட்டுமே..

தமிழகத்தில் அண்ணாத்த  முதல்நாள் எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியது என்பது குறித்து தகவல்  வெளியாகி உள்ளது. அந்த வகையில் முதல் நாள் மட்டும் அண்ணாத்த படம் சுமார் 34.92 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நம்பர் ஒன் இடத்தில் சர்க்கார் திரைப்படம் தான் இருந்தது.

சர்க்கார் 32 கோடியை அள்ளிய நிலையில் தற்போது சர்க்கார் திரைப்படத்தை ஓவர்டேக் செய்து அண்ணாத்த திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினின்னு சும்மாவா சொல்லறாங்க செம்ம மாஸ் பண்ணிவிட்டார் என கூறி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து கொண்டாடியும் வருகின்றனர். நிச்சயம் இந்த திரைப்படம் கிட்டதட்ட 300 கோடிக்கு மேல் அள்ளும் என்பது சினிமா பிரபலங்களின் கருத்தாக இருக்கிறது.

annathaa
annathaa

Leave a Comment