“லியோ” படத்துக்கு வந்த புதிய சிக்கல்.. மூட்டை முடிச்சை கட்டும் லோகேஷ் & கோ.?

வாரிசு படத்தின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து தளபதி விஜய் லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  தோல்வியை சந்திக்காத இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். மிக பிரம்மாண்ட பொருட் செளவில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார் லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் முழுக்க முழுக்க சர்வதேச போதை பொருளை மையமாக வைத்து உருவாகும் என சொல்லப்படுகிறது இதனால் இந்த படத்தில் ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது.

அதற்கு ஏற்றது போல லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், தாமஸ் மாதீவ், பிரியா ஆனந்த், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். காஷ்மீரில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் சென்னை வந்தார்..

காரணம் லியோ திரைப்படத்தில் த்ரிஷா ஆக்சன் காட்சிகளில் நடிக்க இருந்தாராம். ஆனால் மாஸ்டர்கள் வராததால் அவருக்கான போர்ஷன் எடுக்கப்படவில்லை என தெரிந்தவுடன் அவர் சென்னை வந்துள்ளார் மற்றபடி விஜய் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது அதாவது உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட வண்ணமே இருக்கிறது இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட தொடங்கி உள்ளதால் இதனால் ஜம்மு காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment