புகைப்படத்தால் வந்த புதிய ஆசை.! ராஷ்மிகா மந்தனா இப்படி ஒரு கதாபத்திரத்தில் நடிக்க போறாராம்.

rashmika madanna
rashmika madanna

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனாவுக்கு ஆரம்பத்தில் கன்னடத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் போகப் போக தெலுங்கு சினிமா தான் இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து தன் பக்கம் வைத்துக் கொண்டது. அதை உணர்ந்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவும் தற்போது தெலுங்கிலேயே அதிக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் அங்கு அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் தான். டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய படங்கள் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்ற காரணத்தினால் தற்போது தெலுங்கில் உச்ச நட்சத்திரங்கள் உடன் ஜோடி சேரும் வாய்ப்பை அவர் கைப்பற்றி உள்ளார் .

அந்த வகையில் இவர் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து இவர் புஷ்பா என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழில் இவர் சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து ஓரிரு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் தற்போது தமிழிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதிக ஆசைப்படுகிறார்.

அதிகம் தெலுங்கு பக்கம் வாய்ப்புகள் வந்ததால் தமிழில் நிலைத்து நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். மேலும் இந்தியில் கூட தற்பொழுது  ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகா மந்தனாவை பெங்காளி பெண் தோற்றத்தில் ஓவியம் ஒன்றை வரைந்து சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் அந்த புகைப்படத்தை ராஷ்மிகா மந்தனா பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். மேலும் வரும் நாட்களில் பெங்காலி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ரொம்ப ஆசையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.  அச்சு அசல் அப்படியே ராஷ்மிகா மந்தனாவை உரித்து வைத்தது போல அவர் ஓவியம் தீட்டிய புகைப்படம் தான் தற்பொழுது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

rashmika madanna
rashmika madanna