பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் பல கோடி காசு பார்க்கும் ஹீரோ.? கமல் எல்லாம் இவர் பக்கத்துல கூட நிற்கமுடியாதாம்.

சின்னத்திரையில் பல்வேறு புதுவிதமான நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வெகுவாக ஈர்க்கின்றன அந்த வகையில் தமிழில் விஜய் டிவி தொலைக்காட்சி பல சூப்பரான நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டு வருகிறது அதில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது இதனை சீரும் சிறப்புமாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் உலக நாயகன் கமலஹாசனுக்கு தற்பொழுது சம்பளம் 50 கோடி இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒவ்வொரு டாப் பிரபலமும் மிகப்பெரிய ஒரு தொகையை வாங்குகின்றனர். அந்த வகையில் இதில் அதிக சம்பளம் வாங்கும் லிஸ்டில் முதன்மையானவராக உள்ளவர்தான் நடிகர் சல்மான்கான். இவர் தற்போது இந்தியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் 15 சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறார். 14 சீசனை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

பிக் பாஸ் 15வது இவரே தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்காக தற்போது சல்மான்கானுக்கு 350 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சல்மான்கான் வைத்திருக்கிறார் என்பதால் தற்போது அங்கு நடத்தப்படும் பிக் பாஸ்க்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சல்மான் கான் எந்த நிகழ்ச்சியையும் நடத்தினாலும் அது டிஆர்பி உச்சத்தில் இருக்கும் என்பதால் அதற்காக காசுகளை அள்ளி கொடுத்துள்ளது பிக்பாஸ். அந்த காரணத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தற்பொழுது 350 கோடியை சம்பளமாக வாங்க இருக்கிறார்.

சமிபகாலமாக சல்மான்கான் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை தரவில்லை என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தும்சம் செய்வதால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நாயகனாக இருக்கிறார். மேலும்  நிகழ்ச்சியின் மூலம் சம்பளத்தையும் பல கோடி அசால்டாக அள்ளி வருகிறார்.

Leave a Comment