விஜய் வேட்டம் என வெறுத்து ஒதுக்கிய படம் இன்று சூப்பர் ஹிட்.! லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் நடிக்க மறுத்த திரைப்படத்தில் வேற ஒரு நடிகர்கள் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ரன் :- இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான ரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்றது இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் விஜய் அவர்கள்தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாக கூறபடுகிறது.

run
run

சண்டக்கோழி:- விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால், உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சண்டக்கோழி. இந்த திரைப்படமும் நடிகர் விஜய் அவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட திரைப்படம் தான்.

sandakozhi
sandakozhi

சிங்கம்:- கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமான சிங்கம் திரைப்படத்தில் முதலில் நடிகர் விஜய் தான் நடிக்க இருந்தார் ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த திரைப்படமும் நடிகர் விஜய் அவர்கள் நிராகரித்து வெற்றி பெற்ற திரைப்படமாகும்.

singam
singam

தனி ஒருவன் :- எம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா, என பலர் நடிப்பில் உருவாகி மிக பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தனி ஒருவன். இந்த  திரைப்படத்தில் முதலில் நடிகர் விஜய் அவர்கள்தான் நடிக்க இருந்தது. அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்த பிறகுதான் இந்த படத்தின் வாய்ப்பு நடிகர் ஜெயம் ரவிக்கு போனதாக கூறப்படுகிறது.

thani oruvan
thani oruvan

பருத்திவீரன் :- நடிகர் கார்த்தி அவர்கள் நடிப்பில் முதன் முறையாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் பருத்திவீரன். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது விஜய் தான் ஆனால் விஜய்யால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது அவருக்கு சோகம் அளிக்கும் விதமாக அமைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம் நடிகர் கார்த்தியின் வாழ்க்கை திருப்பி போட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

paruthiveeran
paruthiveeran

தீனா:- ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக கொடுத்த திரைப்படம் தீனா. இந்த திரைப்படம் நடிகர் அஜித்தின் கேரியரையே மாற்றிய திரைப்படம் என்றே சொல்லலாம். முதலில் நடிகர் அஜித் நடிக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிக்க இருந்ததாம் ஆனால் கால் சீட் பிரச்சனையால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறப்படுகிறது.

இந்த படங்களை தொடர்ந்து முதல்வன், ஆட்டோகிராப், தூள், அனேகன், உன்னை நினைத்து, உள்ளிட்ட படங்களில் முதலில் நடிகர் விஜய் அவர்கள் தான் நடிக்க இருந்தார் ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் வேற ஒரு நடிகர்கள் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

Leave a Comment