திரை உலகில் காமெடியன்னாக ஜொலித்த பலரும் தற்பொழுது முக்கிய கதாபாத்திரம் மற்றும் ஹீரோவாகவும் நடித்து வெற்றிகளை அள்ளுகின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பவர் வடிவேலு. இவர் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலி என பல படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றிகளை அள்ளி உள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் ஹீரோவாக நடித்தார் ஆனால் அந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்றது அதனை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வடிவேலு நடித்த திரைப்படம் மாமன்னன் இந்த படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக நடித்திருந்தார்.
வடிவேலு தனது படங்களில் துள்ளான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஆனால் மாமன்னன் படத்தில் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறி அழகாக நடித்திருந்தார். இவரது நடிப்பை பார்க்க தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் திரைஅரங்கு பக்கம் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றனர்.
மேலும் படத்தில் உதயநிதி, ரவீனா ரவி, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் போன்றவர்களின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. இதனால் மாமன்னன் படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த படத்தின் வசூலும் அதிகரித்தே காணப்படுகிறது. 35 கோடி bugdet ல் உருவான மாமன்னன் திரைப்படம் 4 நாட்களில் முடிவில் மட்டுமே 33 கோடி வசூலில் உள்ளது.
வருகின்ற நாட்களில் வரும் வசூல்கள் அனைத்துமே மாமன்னன் திரைப்படத்திற்கு லாபமாக இருக்கும் என கூறப்படுகிறது இதனால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது ஏற்கனவே இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர் மேலும் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் பரிசாக கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.