ரிலீசுக்கு முன்பே போட்ட காசை எடுத்த “லியோ” திரைப்படம்.? 1000 கோடி வசூல் கன்ஃபார்ம்..

0
leo-
leo-

தளபதி விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் உருவான முதல் படமான மாஸ்டர் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதனால் லியோ படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருக்கின்றன.

அதற்கு ஏற்றார் போல இந்த படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. முதலில் தளபதி 67 படத்தில் இணைந்துள்ள நடிகர் நடிகைகள் குறித்த விபரம் வெளிவந்துள்ளது அதன்படி இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.

அதைத்தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தளபதி 67 படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அதற்காக படக்குழுவில் உள்ள நடிகர் நடிகைகள் தனி விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

படப்பிடிப்பு ஜோராக நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அதன்படி தற்போது வந்த தகவல் என்னவென்றால் லியோ படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி வசூல் செய்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வரும் லியோ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. அதேபோல் ஓடிடி ரைட்ஸ் netflix வாங்கி உள்ளது.

லியோ சாட்டிலைட் ரைட்ஸ் 80 கோடிக்கும் ஓடிடி ரைட்ஸ் 150 கோடிக்கும் மியூசிக் ரைட்ஸ் பதினாறு கோடிக்கும் விற்பனை ஆகி உள்ளது மொத்தம் லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பு 246 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.