ஷங்கர் இயக்கத்தில் வெளியான “ஐ” திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமா.? வெளிவரும் தகவல்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்தையும் மிகப்பெரிய பட்ஜெட் படமாக எடுத்து அதில் வெற்றி கண்ட தால் தற்போது தமிழ்நாட்டையும் தாண்டி  இந்திய அளவில் உயர்ந்து உள்ளவர் இயக்குனர் ஷங்கர்.

ஆனால் சமீப காலமாக இவரது படங்கள் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன அப்படித்தான் இவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான படம் ஐ. இத்திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து எமி ஜாக்சன், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர். கதைக்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி அதிக ஏற்றவாறு நடித்து அசத்தினார் நடிகர் விக்ரம்.

இந்த திரைப்படத்திலும் அப்படித்தான் கதைக்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு மிக சிறப்பாக நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர். இந்த திரைப்படம் மிகப்பெரிய தொழில் நுட்பத்தில் உருவானதால் படத்தின் பட்ஜெட் சுமார் 210 கோடி என தெரிவித்துள்ளனர். ஆனால் படம் வர்த்தகரீதியாக விலை  போனது என்னமோ 90 கோடி தான். இதனால் இந்தப் படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் தனது யூடியூப் தளத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார்.இருப்பினும் இந்த திரைப்படம் திரையரங்கில் நன்றாகத்தான் ஓடியது என ஒருபக்கம் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment